சுவாதி கொலை: 3 கோடி இழப்பீடு மனு நிராகரிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சுவாதியின் பெற்றோர், மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது.கடந்த 2016ல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில்

சென்னை:சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சுவாதியின் பெற்றோர், மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2016ல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மின்சார ஒயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் சந்தான கோபாலகிருஷ்ணன் - ரங்கநாயகி தாக்கல் செய்த மனு:பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில்வே நடைமேடையில், இந்த கொலை சம்பவம் நடந்தது. ரயிலில் பயணிப்பவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் இருப்பவர்களுக்கு, உரிய பாதுகாப்பை ரயில்வே வழங்கியிருந்தால், இந்தச் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். ரயில்வேயின் கவனக்குறைவு தான், ஒரு குற்றத்தை புரிவதற்கு இந்த அளவுக்கு துணிச்சலை தந்துள்ளது.
ரயில் நிலையத்தில் போலீசார் யாரும் இல்லை; கண்காணிப்பு கேமரா இல்லை.எனவே, 24 வயதான என் மகள் இறப்புக்கு, மூன்று கோடி ரூபாய் இழப்பீட்டை, 12 சதவீத வட்டியுடன், தெற்கு ரயில்வே வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன், விசாரணைக்கு வந்தது. தெற்கு ரயில்வே சார்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, ''இந்த கொலை சம்பவத்துக்கு, ரயில்வே நிர்வாகம் பொறுப்பாக முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X