ஒடிசா சுரங்கத்தில் இருந்து 1000 கோடி கிலோ நிலக்கரி| Dinamalar

ஒடிசா சுரங்கத்தில் இருந்து 1000 கோடி கிலோ நிலக்கரி

Added : செப் 24, 2022 | |
சென்னை:ஒடிசாவின் சந்திரபிலா சுரங்கத்தில் வன பகுதியை தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை, தமிழகத்திற்கு எடுத்து வரும் பணியை, மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில், 4,100 மெகா வாட் திறனில், நான்கு அனல் மின் நிலையங்கள் அமைத்து வருகிறது. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி

சென்னை:ஒடிசாவின் சந்திரபிலா சுரங்கத்தில் வன பகுதியை தவிர்த்து, மற்ற இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை, தமிழகத்திற்கு எடுத்து வரும் பணியை, மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.


தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி மாவட்டங்களில், 4,100 மெகா வாட் திறனில், நான்கு அனல் மின் நிலையங்கள் அமைத்து வருகிறது. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.இதற்காக ஒடிசா மாநிலம், ஆங்கூல் மாவட்டத்தில், 90 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சந்திரபிலா சுரங்கத்தை, தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய நிலக்கரி அமைச்சகம் 2016ல் ஒதுக்கீடு செய்தது.


அங்கிருந்து நிலக்கரி எடுத்து வர ஆர்வம் காட்டாத மின் வாரியம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நிலக்கரி வாங்கி வந்தது.நீண்ட இழுபறிக்கு பின், சந்திரபிலாவில் இருந்து ஆண்டுக்கு 1,000 கோடி கிலோ என, 35 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுத்து, தமிழகத்திற்கு சப்ளை செய்யும் பணிகளை செய்ய மின் வாரியம், 2019ல் 'டெண்டர்' கோரியது.அதில் ஒரு நிறுவனம் பங்கேற்ற நிலையில், 2020ல் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.


அந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் கூட பங்கேற்காததால் அதுவும் ரத்து செய்யப்பட்டது.சந்திரபிலா சுரங்கம் அமைந்துள்ள ஒட்டுமொத்த நில பகுதியில் மூன்றில் ஒரு பங்கு இடம், மத்திய வனத் துறை வசம் வருகிறது. அங்கு நிலக்கரி எடுக்க வனத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் தான் நிலக்கரி எடுக்கும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் முன்வரவில்லை என்பதை மின் வாரியம் கண்டறிந்தது.


எனவே, முதல் கட்டமாக வன பகுதி இடம்பெறாத பகுதிகளில் இருந்து, நிலக்கரி எடுத்து வரும் பணிகளை துவக்க முடிவு செய்த மின் வாரியம், அதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.அதன் அடிப்படையில், தற்போது வன பகுதி அல்லாத இடங்களில் இருந்து ஆண்டுக்கு, 1,000 கோடி கிலோ நிலக்கரியை 28 ஆண்டுகளுக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்யும், 'டெண்டர்' பணிகளை, மின் வாரியம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X