சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த நபர் நள்ளிரவில் 'ஷாப்பிங்'

Added : செப் 24, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட் கூரையை உடைத்து உள்ளே புகுந்து,வீட்டுக்கு தேவையான மளிகை பொருள்கள், செலவுக்கு பணம் ஆகியவற்றை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.தஞ்சாவூர், துவாரா நகரை சேர்ந்தவர் காமேஷ், 22. இவர், தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து கடையை பூட்டி

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட் கூரையை உடைத்து உள்ளே புகுந்து,வீட்டுக்கு தேவையான மளிகை பொருள்கள், செலவுக்கு பணம் ஆகியவற்றை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.
தஞ்சாவூர், துவாரா நகரை சேர்ந்தவர் காமேஷ், 22. இவர், தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை கடையை திறந்த போது, கடையின் கூரையை உடைத்து பொருள்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் அதிகாலை 1:00 மணிக்கு கடையின் கூரையை உடைத்து, உள்ளே இறங்கி, ஷாப்பிங் செய்வது போல, ஒரு மணி நேரம் அங்கும், இங்கும் திரிந்து பொருட்களை எடுத்தது தெரிந்தது.
அதுபோல, கல்லாப்பெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாயையும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனக்கு தேவையான பொருள்களையும் எடுத்து, பைகளில் போட்டு, வந்த வழியே சென்றதும் தெரிந்தது.இது குறித்து காமேஷ் அளித்த புகார்படி, தமிழ் பல்கலைக் கழக போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடுகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X