மேட்டூர் நீர்மட்டம் 69 நாளுக்கு பின்முழு கொள்ளளவில் இருந்து சரிவு

Added : செப் 24, 2022 | |
Advertisement
மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியில் இருந்து, 69 நாளுக்கு பின் சரிந்துள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த ஜூலை, 16ல் அணை நிரம்பியது. தொடர்ந்து பெய்த மழையால், அணை நிரம்பியே இருந்ததால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர்

மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியில் இருந்து, 69 நாளுக்கு பின் சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கடந்த ஜூலை, 16ல் அணை நிரம்பியது. தொடர்ந்து பெய்த மழையால், அணை நிரம்பியே இருந்ததால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

நேற்று முன்தினம், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று 13 ஆயிரத்து, 456 கன அடியாக மேலும் சரிந்தது. இதனால், 69 நாளாக, 120 அடியில் நீடித்த அணை நீர்மட்டம், நேற்று, 119.95 அடியாக சற்று சரிந்தது. அதற்கேற்ப நீர் இருப்பும், 93.39 டி.எம்.சி.,யாக சரிந்தது.மேலும் அணையில் இருந்து வினாடிக்கு, 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதில் கிழக்கு மேற்கு கால்வாய் வழியே, 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X