கொள்முதல் விலையை உயர்த்தாவிடில்ஆவினுக்கு பால் நிறுத்தும் போராட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
ஆத்துார்:கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், அக்டோபரில் ஆவினுக்கு பால் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க, மாநில தலைவர் ராஜேந்திரன், சேலம் மாவட்டம், ஆத்துாரில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 12 ஆயிரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் உள்ள நிலையில் 9,070 சங்கங்களில் கொள்முதல்

ஆத்துார்:கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், அக்டோபரில் ஆவினுக்கு பால் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க, மாநில தலைவர் ராஜேந்திரன், சேலம் மாவட்டம், ஆத்துாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 12 ஆயிரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் உள்ள நிலையில் 9,070 சங்கங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஜூலையில் ஆவினுக்கு தினமும், 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது. தற்போது 37 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. ஆனால் 2019 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், செயலர், ஆணையரிடம், பசும்பால் லிட்டருக்கு, 10 உயர்த்தி 42 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 5 உயர்த்தி, 51 ரூபாய் என, கொள்முதல் விலையை உயர்த்த மனு அளித்தோம். கொள்முதல் விலையை உயர்த்தவில்லை எனில், அக்டோபர் முதல் வாரம், ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X