பைக்கில் வந்த இன்ஜினியர்லாரியில் சிக்கி பரிதாப பலி

Added : செப் 24, 2022 | |
Advertisement
வானுார்:புதுச்சேரி அருகே பைக்கில் வந்த வாலிபர் மண் குவியலில் சிக்கி விழுந்ததில், பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஏறி, தலை நசுங்கி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அன்னம்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சரண் என்கிற பச்சையப்பன், 26; ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர்.இவர், புதுச்சேரியில் தங்கி, விழுப்புரம் மாவட்டம், பட்டானுார் தனியார்
பைக்கில் வந்த இன்ஜினியர்லாரியில் சிக்கி பரிதாப பலி

வானுார்:புதுச்சேரி அருகே பைக்கில் வந்த வாலிபர் மண் குவியலில் சிக்கி விழுந்ததில், பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஏறி, தலை நசுங்கி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அன்னம்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சரண் என்கிற பச்சையப்பன், 26; ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர்.இவர், புதுச்சேரியில் தங்கி, விழுப்புரம் மாவட்டம், பட்டானுார் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இவரது பெரியப்பா இறந்ததால், நேற்று முன்தினம் அன்னம்புத்துாருக்குச் சென்றார். பின், நேற்று காலை 8:30 மணிக்கு, அன்னம்புத்துாரில் இருந்து கே.டி.எம்., பைக்கில், ஹெல்மெட் அணிந்து, திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் வழியாக வந்தார்.பட்டானுார் அருகே சாலையில் இருந்த மண் குவியலில் சிக்கி, பைக் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்க டயர், சரண் தலை மீது ஏறியதில், ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி இறந்தார்.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X