மனைவியின் குளியல் வீடியோ மிரட்டிய கணவர் மீது வழக்கு| Dinamalar

மனைவியின் குளியல் வீடியோ மிரட்டிய கணவர் மீது வழக்கு

Added : செப் 24, 2022 | |
சேலம்:முதல் மனைவி குளித்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கணவர், அவரது இரண்டாவது மனைவி உள்பட, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம், அம்மாபேட்டை, எஸ்.கே.டவுன் ஷிப்பை சேர்ந்த, 29 வயது பெண்ணுக்கும், கோரிமேட்டை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 32, என்பவருக்கும், 2017ல் திருமணமானது. அப்போது, 100 சவரன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது.அந்த நகைகளை ஜெயப்பிரகாஷ், அவரது உறவினர்

சேலம்:முதல் மனைவி குளித்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கணவர், அவரது இரண்டாவது மனைவி உள்பட, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம், அம்மாபேட்டை, எஸ்.கே.டவுன் ஷிப்பை சேர்ந்த, 29 வயது பெண்ணுக்கும், கோரிமேட்டை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 32, என்பவருக்கும், 2017ல் திருமணமானது. அப்போது, 100 சவரன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது.அந்த நகைகளை ஜெயப்பிரகாஷ், அவரது உறவினர் சகுந்தலா, 34, ஆகியோர், குடும்ப செலவுக்கு அடகு வைத்தனர். அத்துடன் ஜெயப்பிரகாசுக்கு, சவுந்தர்யா, 27, என்பவரை இரண்டாம் திருமணம் செய்துவைத்தனர்.


இந்நிலையில் கணவருடன் வாழ வேண்டும் எனில், முதல் மனைவியின் தந்தை பெயரில் உள்ள நிலங்களை எழுதி கொடுக்க வேண்டும் என, ஜெயப்பிரகாஷ், அவரது உறவினர்கள் மிரட்டல் விடுத்தனராம்.


இல்லையெனில், முதல் மனைவி குளித்தபோது, அவருக்கு தெரியாமல் எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து, அப்பெண் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார், ஜெயப்பிரகாஷ், சவுந்தர்யா, உறவினர்கள் குணசேகரன், சகுந்தலா, தீபிகா, சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X