பாலக்கோடு கல்லுாரி மாணவர்ரூ.1 கோடி கேட்டு கடத்தல் ஏழு பேரை கைது செய்தது போலீஸ்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பாலக்கோடு:பாலக்கோட்டில் கல்லுாரி மாணவரை கடத்தி, ஒரு கோடி ரூபாய் கேட்ட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது, 17 வயது மகன், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு படிக்கிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவரை, இரு தினங்களுக்கு

பாலக்கோடு:பாலக்கோட்டில் கல்லுாரி மாணவரை கடத்தி, ஒரு கோடி ரூபாய் கேட்ட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது, 17 வயது மகன், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு படிக்கிறார்.விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவரை, இரு தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் கடத்தி சென்று, சிவக்குமாரிடம், ஒரு கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, சிவக்குமார், பாலக்கோடு டி.எஸ்.பி., சிந்துவிடம் புகாரளித்தார். அதன்படி, தனிப்படை அமைத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் மாணவனை உயிருடன் போலீசார் மீட்டனர்.இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுக்காரரான சதீஷ்குமார், 23, என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரது கூட்டாளிகள் ஆறு பேர் உதவியுடன் மாணவரை கடத்தியது தெரிந்தது.இதையடுத்து, அவரின் கூட்டாளிகள் ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X