அனுமதியின்றி கட்டிய தண்ணீர் தொட்டிஇரண்டே நாளில் இடிந்ததில் மூதாட்டி பலி

Added : செப் 24, 2022 | |
Advertisement
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே அனுமதியின்றி, பஞ்., வார்டு உறுப்பினரின் கணவர் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், நுாறு நாள் வேலைக்கு வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை யூனியன், நாரைக்கிணறு கிராம பஞ்., 5வது வார்டு உறுப்பினர் ரம்யா, 30; இவரது கணவர் முருகன், 40.இவர், பெரியகிணறு பகுதியில், பொதுக்கழிப்பறை அருகே துணி துவைக்க
அனுமதியின்றி கட்டிய தண்ணீர் தொட்டிஇரண்டே நாளில் இடிந்ததில் மூதாட்டி பலி

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே அனுமதியின்றி, பஞ்., வார்டு உறுப்பினரின் கணவர் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், நுாறு நாள் வேலைக்கு வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை யூனியன், நாரைக்கிணறு கிராம பஞ்., 5வது வார்டு உறுப்பினர் ரம்யா, 30; இவரது கணவர் முருகன், 40.இவர், பெரியகிணறு பகுதியில், பொதுக்கழிப்பறை அருகே துணி துவைக்க வசதியாக, கருங்கல் திட்டு மற்றும் 5,000 லிட்டர் கொள்ளளவில், நிலமட்ட தண்ணீர் தொட்டியை, இரு நாட்களுக்கு முன் கட்டி முடித்துள்ளார்.
பொது மக்களின் வசதிக்காக, தன் சொந்த பணத்தில், பஞ்., நிர்வாகம் அனுமதியின்றி, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ளார். இது குறித்து பஞ்., தலைவர் ரங்கசாமி, மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார்.இந்நிலையில், இப்பகுதியில் நேற்று காலை, 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, தண்ணீர் தொட்டி இடிந்து, மேலக்காட்டைச் சேர்ந்த சிலம்பன் மனைவி பாப்பாத்தி, 55, மற்றும் லட்சுமி, 55, ஆகியோர் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.காயமடைந்த லட்சுமி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X