4,000 சதுரடியில் ரோஜா பூக்களால்புற்றுநோய் ரிப்பன் வடிவமைத்து சாதனை

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி:உலக ரோஸ் தினத்தை முன்னிட்டு 4,000 சதுர அடியில் ரோஜா பூக்களை வைத்து, புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை வரைந்து புதுச்சேரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.கனடாவை சேர்ந்த மிலாண்டா ரோஸ் என்ற சிறுமி புற்றுநோயால் இறந்தார். அவரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதனையொட்டி, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
4,000 சதுரடியில் ரோஜா பூக்களால்புற்றுநோய் ரிப்பன் வடிவமைத்து சாதனை

புதுச்சேரி:உலக ரோஸ் தினத்தை முன்னிட்டு 4,000 சதுர அடியில் ரோஜா பூக்களை வைத்து, புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை வரைந்து புதுச்சேரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.
கனடாவை சேர்ந்த மிலாண்டா ரோஸ் என்ற சிறுமி புற்றுநோயால் இறந்தார். அவரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனையொட்டி, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கிரசண்ட் பள்ளி 10ம் வகுப்பு மாணவி நசிராபேகம், நேற்று முன்தினம் புதுச்சேரி இந்திரா காந்தி கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 80 அடிக்கு 50 அடி என, 4000 சதுர அடி அளவில் புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை, 100 கிலோ ரோஜா பூக்களை பயன்படுத்தி உருவாக்கி உலக சாதனை நிகழ்த்தினார். இதை, கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, லட்சுமிகாந்தன், 'ராக்' கல்வி குழும நிறுவனர் முகமது பாரூக், செயலாளர் அரிதேவன், கிரசண்ட் பள்ளி முதல்வர் தென்னரசு, துணை முதல்வர் சாதிக் அலி ஆகியோர் உலக சாதனை புரிந்த மாணவியை பாராட்டினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் நிர்வாகி பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X