இன்ப்ளூயன்ஸா' தொற்றுக்கு ஆன்டிபயாடிக்ஸ்' அவசியம் இல்லை

Added : செப் 24, 2022 | |
Advertisement
மதுரை :'இன்ப்ளூயன்ஸா' தொற்றுக்கு ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகள் அவசியம் இல்லை. வைரஸோடு சேர்ந்து பாக்டீரியா தொற்று அதிகம் இருக்கும் போது 'ஆன்டிவைரல்' மருந்துகளுடன் 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் தேவைப்படலாம் என மதுரையைச் சேர்ந்த நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் பழனியப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பருவநிலை மாற்றம் காரணமாக செப்டம்பரிலேயே
 இன்ப்ளூயன்ஸா' தொற்றுக்கு ஆன்டிபயாடிக்ஸ்' அவசியம் இல்லை

மதுரை :'இன்ப்ளூயன்ஸா' தொற்றுக்கு ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகள் அவசியம் இல்லை. வைரஸோடு சேர்ந்து பாக்டீரியா தொற்று அதிகம் இருக்கும் போது 'ஆன்டிவைரல்' மருந்துகளுடன் 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் தேவைப்படலாம் என மதுரையைச் சேர்ந்த நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் பழனியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பருவநிலை மாற்றம் காரணமாக செப்டம்பரிலேயே 'இன்ப்ளுயன்ஸா' வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. நுரையீரல் பாதிப்பினால் ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., வைரஸ் தொற்று, பாக்டீரியா பாதிப்பு அதிகரிக்கும். இந்த வைரஸ் பலவகைகளில் உருமாறும் போது தாக்கமும் வீரியமும் அதிகமாகி பாதிப்பை உண்டாக்குகிறது. தற்போது உள்ளது 'இன்ப்ளூயன்ஸா ஏ' வைரஸ்களின் துணை வகைகள் தான் எச்1என்1, எச்3என்2'.உலகளவில் 1919ல் இதன் பாதிப்பு அதிகரித்தது. இந்தியாவில் 2009 ல் கண்டறியப்பட்டது. 2015ல் உயிரிழப்பை ஏற்படுத்தியது. பன்றிகளின் மூச்சுக்குழாயில் இருந்து மனிதனுக்கு பரவி பின்னர் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
'இன்ப்ளுயன்ஸா' உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடம்பு வலி, உடல் குளிர்தல், நீர்ச்சத்து குறைதல் மற்றும் சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படும். டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவது அவசியம். வயதானவர்கள் மற்றும் இதர நோய் உள்ளவர்களுக்கு நுரையீரலின் செயல்திறன் குறைகிறது. உள்நோயாளிகளாக சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


முக கவசம் கட்டாயம்



வைட்டமின் 'சி' சத்து நிறைந்த உணவு, சிட்ரஸ் பழங்கள், காய்கறி சூப் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழப்பைத் தவிர்க்க அதிகளவில் நீராகாரங்களை குடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் காற்றோட்டமான சூழலில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் கட்டாயம். கை, கால்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
இத்தொற்றுக்கு 'ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகள் அவசியம் இல்லை. சில நேரங்களில் வைரஸோடு சேர்ந்து பாக்டீரியா தொற்று அதிகம் இருக்கும் போது 'ஆன்டிவைரல்' மருந்துகளுடன் 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் தேவைப்படலாம். டாக்டர்களின் ஆலோசனையின்றி மருந்துகளை சாப்பிடக்கூடாது.
'இன்ப்ளுயன்ஸ்' வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தலாம். வைரஸின் வீரியம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் என்பதால் ஆண்டுக்கொரு முறை தடுப்பூசி செலுத்துவது அவசியம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X