மகளை கொன்ற தாய்க்குஆயுள் தண்டனை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே பூச்சிமருந்து கொடுத்து மகளை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்ரமணியன், 28. இவரது மனைவி பரமேஸ்வரி, 28. இவர்களுக்கு கரிஷ்னா, 9; பிரதீப், 7; ஹரணி, 2; ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.கடந்த 2020ல் கணவர் - மனைவிக்கு இடையே பணம் தொடர்பாக
மகளை கொன்ற தாய்க்குஆயுள் தண்டனை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே பூச்சிமருந்து கொடுத்து மகளை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்ரமணியன், 28. இவரது மனைவி பரமேஸ்வரி, 28. இவர்களுக்கு கரிஷ்னா, 9; பிரதீப், 7; ஹரணி, 2; ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.கடந்த 2020ல் கணவர் - மனைவிக்கு இடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
விரக்தியடைந்த பரமேஸ்வரி, பூச்சிக்கொல்லி மருந்தை மகள் கரிஷ்னாவிற்கு கொடுத்து அவரும் குடித்தார்.அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; அங்கு கரிஷ்னா இறந்தார்; பரமேஸ்வரி பிழைத்துக் கொண்டார்.இது குறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் படி, பரமேஸ்வரி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி கீதாராணி, மகளை விஷம் கொடுத்து கொலை செய்த பரமேஸ்வரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.மேலும் 15 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X