கடப்பாரையால் கதவை உடைத்துகணவர் வீட்டில் குடியேறிய பெண்

Added : செப் 24, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 32. சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கும், திருவாரூர் மாவட்டம் பில்லுார் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா, 28, என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.திருமணத்தின் போது 24 பவுன், பைக், சீர்வரிசை கொடுத்துள்ளனர். மூன்று மாதங்கள் கணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்த
கடப்பாரையால் கதவை உடைத்துகணவர் வீட்டில் குடியேறிய பெண்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 32. சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், திருவாரூர் மாவட்டம் பில்லுார் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா, 28, என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.திருமணத்தின் போது 24 பவுன், பைக், சீர்வரிசை கொடுத்துள்ளனர். மூன்று மாதங்கள் கணவன், மனைவி சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்னைக்கு வேலைக்கு சென்ற நடராஜன் மனைவியை அழைத்துச் செல்லவில்லை.
பிரவீனாவிடம் மாமனார், குடும்பத்தினர் மேலும் நகைகள் கேட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் பிரவீனா வீட்டில் தனியாக இருந்தபோது கணவரின் சகோதரர் தவறாக நடக்க முயன்றதாக பிரவீனா கணவர், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். யாரும் கண்டு கொள்ளாததால் பிரவினா, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த சம்பவத்திலிருந்து நடராஜன் மனைவியை பார்ப்பது, பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவரது பெற்றோர் பிரவீனாவை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளனர்.இதனால் செய்வது அறியாத தவித்த பிரவீனா வீட்டு வாசலில் சில நாட்களாக தங்கியிருந்தார்.

மயிலாடுதுறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் கணவரின் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே குடியேறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X