பெண் அதிகாரியை தாக்கியகணவர், மாமனார் மீது வழக்கு

Added : செப் 24, 2022 | |
Advertisement
பண்ருட்டி,:பண்ருட்டி அருகே, வங்கி பெண் அதிகாரியை தாக்கிய கணவர், மாமனாரை போலீசார் தேடுகின்றனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்தஎல்.என்.புரம் எஸ்.பி.ஐ. காலனி நேரு நகரை சேர்ந்தவர் பாபு, 62; இவரது மகள் சிவரஞ்சனி, 35; திருப்பூரில் தனியார் வங்கியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கிளை மேலாளராக பணிபுரிந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடாஜலபதிராஜி என்பவரை திருமணம்

பண்ருட்டி,:பண்ருட்டி அருகே, வங்கி பெண் அதிகாரியை தாக்கிய கணவர், மாமனாரை போலீசார் தேடுகின்றனர்.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்தஎல்.என்.புரம் எஸ்.பி.ஐ. காலனி நேரு நகரை சேர்ந்தவர் பாபு, 62; இவரது மகள் சிவரஞ்சனி, 35; திருப்பூரில் தனியார் வங்கியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கிளை மேலாளராக பணிபுரிந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடாஜலபதிராஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், வெங்கடாஜலபதி ராஜியும், அவரது தந்தை கணேசனும் குழந்தைகளை பார்ப்பதற்காக பண்ருட்டிக்கு வந்தனர்குழந்தையை காண்பிக்க மறுப்பது ஏன் என கேட்டு சிவரஞ்சனியையும், அவரது பெற்றோர் பாபு, ரூபாவதி ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த சிவரஞ்சனியும், அவரது பெற்றோரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசில் பாபு அளித்த புகாரின் அடிப்படையில், வெங்கடபதிராஜி, அவரது தந்தை கணேசன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X