இது உங்கள் இடம்: ஆசிரியர்களே தப்பு செய்யாதீங்க!

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்று பாடியுள்ளார் மகாகவி பாரதியார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில், அங்கு படிக்கும், 40 மாணவர்களுக்கும்,
ஜாதிகள், கிருஷ்ணகிரி, மேல்நிலை பள்ளி, இலவச சைக்கிள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்



ரா.சேது ராமானுஜம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்...' என்று பாடியுள்ளார் மகாகவி பாரதியார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில், அங்கு படிக்கும், 40 மாணவர்களுக்கும், அப்பகுதி யில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும், 45 மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அங்கு நடந்த சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு எரிகிறது.

அதாவது, மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில், எம்.பி.சி., - பி.சி., மற்றும் எஸ்.சி., என, சாக்பீசில் எழுதப்பட்டிருந்ததுடன், எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவ - மாணவியருக்கான சைக்கிள்கள் தனியாக பிரித்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.


latest tamil news


சைக்கிள்களின் இருக்கைகளில், சாக்பீசால் ஜாதி வாரியாக பிரித்து எழுதியதே தவறு. அப்படிப்பட்ட நிலையில், எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியருக்கான சைக்கிள்களை தனியாக நிறுத்தி வைத்து வழங்கியது, அதை விட பெரிய தவறாகும். புத்திசாலித்தனமாக வேலை செய்கிறோம் என்று நினைத்து, இப்படிப்பட்ட முட்டாள்தனமான வேலையை ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர்.

இங்கு நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பர்கூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும் பங்கேற்றுஉள்ளார். அவராவது, மாணவர்களை பிரித்துக் காட்டிய, ஆசிரியர்களின் செயலை கண்டித்திருக்க வேண்டும்; அதுவுமில்லை.

ஆசிரியர்கள், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமலும், ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு பார்க்காமலும், அனைத்து மாணவர்களும் சமமானோர் என்ற ரீதியில், தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்பதே, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு. ஆசிரியர்களே... இனியும் இதுபோன்ற தப்பை செய்யாதீங்க!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-செப்-202205:29:22 IST Report Abuse
sankaseshan தமிழநாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நாறுகிறது இந்த லட்சணத்தில் முதல்வருக்கு பெருமை முன்னணி மாநிலமாம்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
25-செப்-202202:29:07 IST Report Abuse
Aarkay இட ஒதுக்கீடு ஒழிந்தால்தான் ஜாதி உணர்வுகள் ஒழியும். குறைந்தபட்சம் வருமான உச்ச வரம்புடன் கூடிய ஒதுக்கீடு வந்தால்தான், அதன் பலன் கடைநிலை வரை சென்று சேரும். இல்லையெனில், அனுபவித்தவர்களே மீண்டும், மீண்டும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-செப்-202201:23:32 IST Report Abuse
வெகுளி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் திராவிட மாடலை சாக்பீஸில் எழுதிக்காட்டிய இவர்களுக்கு விடியல் நல்லாசிரியர் விருது வழங்கப்படுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X