கல்லுாரி மாணவியிடம் ரூ.22 லட்சம் நுாதன மோசடி

Added : செப் 24, 2022 | |
Advertisement
கடலுார்:ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி, கல்லுாரி மாணவியிடம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது கல்லுாரி மாணவி, ஆன்லைன் மூலமாக அடிக்கடி வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி, அவரது வீட்டிற்கு கோல்கட்டாவில் இருந்து தபால் வந்தது.

கடலுார்:ரூ.15 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி, கல்லுாரி மாணவியிடம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.
கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்த 22 வயது கல்லுாரி மாணவி, ஆன்லைன் மூலமாக அடிக்கடி வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி, அவரது வீட்டிற்கு கோல்கட்டாவில் இருந்து தபால் வந்தது. அதில், '15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக கிடைத்துள்ளது எனவும், காருக்கு வரி செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் கார் ஒப்படைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை நம்பிய மாணவி, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான தன் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து, மர்ம நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பல தவணைகளாக 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மாணவி செலுத்தியும் கார் கிடைக்கவில்லை.மர்ம நபர் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து, பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. பாதிக்கப்பட்ட பெண், கடலுார் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X