காத்திருப்பு போராட்டம்: மின் சங்கத்தினர் அறிவிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்., 26ம் தேதி காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாக மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது:புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வு உட்பட சலுகைகளை மின் வாரிய

சென்னை:அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்., 26ம் தேதி காலை முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாக மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
கூட்டு நடவடிக்கை குழுவினர் கூறியதாவது:புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வு உட்பட சலுகைகளை மின் வாரிய ஊழியர்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெற்ற பின் தான் செயல்படுத்த வேண்டும் என்ற ஆணையையும் ரத்து செய்ய வேண்டும்.மின் வாரியத்தில் 'அவுட்சோர்சிங்' முறையில் வேலை வழங்குவதை கைவிட வேண்டும்.

'கேங்மேன்' ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே வேறு வழியில்லாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மின் வாரிய தலைமை அலுவலகம் முன் செப்., 26 காலை முதல் அனைத்து ஊழியர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவர். இதேபோல் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும், என்றனர்.காத்திருப்பு போராட்டம் நடந்தால் மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X