திறக்கப்படாத நடை மேம்பாலம்; பொதுமக்கள் தவிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
சாய்ந்த பெயர்ப்பலகைஉடுமலை, நகராட்சி நெடுஞ்செழியன் காலனியில் பெயர் பலகை கீழே கிடக்கிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை. வெயிலிலும், மழையிலும் பட்டு சேதமடைய வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ்குமார், உடுமலை.ரோட்டில் பள்ளம்உடுமலை, பெரியகோட்டை ஊராட்சி பள்ளி ரோட்டில், கற்கள் பெயர்ந்து கழிவுநீர் ஓடை மூடப்படாமல்
திறக்கப்படாத நடை மேம்பாலம்; பொதுமக்கள் தவிப்பு


சாய்ந்த பெயர்ப்பலகை



உடுமலை, நகராட்சி நெடுஞ்செழியன் காலனியில் பெயர் பலகை கீழே கிடக்கிறது. இதை யாரும் கண்டுகொள்வதில்லை. வெயிலிலும், மழையிலும் பட்டு சேதமடைய வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ்குமார், உடுமலை.


ரோட்டில் பள்ளம்


உடுமலை, பெரியகோட்டை ஊராட்சி பள்ளி ரோட்டில், கற்கள் பெயர்ந்து கழிவுநீர் ஓடை மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாக செல்லும் மாணவர்கள் தவறி விழ வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் இடைஞ்சலாக உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் இதை சரி செய்ய வேண்டும்.- மோகன், உடுமலை.


திறக்காத நடைமேம்பாலம்


உடுமலை, பஸ் ஸ்டாண்ட் அருகே, பயணியர் பொள்ளாச்சி ரோட்டை கடப்பதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து, நடைமேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், இன்னும் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. எனவே இதை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை.


ஆக்கிரமிப்புகளை அகற்றணும்


உடுமலை, ராஜேந்திரா ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை.


போக்குவரத்து பாதிப்பு


தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. புறநகர் பஸ்கள் உள்ளே செல்லாமல், வெளியில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கிறது. இதனால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.


பிரதிபலிப்பான் அமைங்க


மடத்துக்குளம், அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு பொதுப்பணித்துறையினர் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.- செல்வராஜ், உடுமலை.


கழிவுநீர் தேக்கம்


உடுமலை, பெரியார் நகர் ரயில்வே சுரங்கப்பாலத்தில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அங்கு தேங்கும் கழிவுநீர் அகற்ற வேண்டும்.- சுரேஷ், உடுமலை.


பஸ் ஸ்டாண்ட் தேவை


கணியூர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால், அங்கு இட நெருக்கடி ஏற்படுகிறது. பயணியரும் பாதிக்கப்படுகின்றனர். கணியூரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.- ரமேஷ், உடுமலை.


வனத்துறை கவனத்துக்கு


திருமூர்த்திமலை, பஞ்சலிங்கம் அருவியில், பெண்கள் உடை மாற்றும் சேதமடைந்துள்ளது. இதனால், அவர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் அதை சீரமைக்க வேண்டும்.- சாந்தி, உடுமலை.


பூங்காவை புதுப்பிங்க...


அமராவதி, அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுபா பயணியர் வருகை தருகின்றனர். ஆனால் அங்குள்ளசிறுவர் பூங்கா பராமரிப்பின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, இந்த பூங்காவை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X