வன உயிரின வார விழா போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், இவ்விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி,

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், இவ்விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி மற்றும் வினாடி, வினா போட்டிகள் நடத்தப்படுகிறது.ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் இணைய வழி வாயிலாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்படுகிறது.ஓவியப்போட்டி, 'வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு', 'வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம்' ஆகிய தலைப்பிலும், கட்டுரை போட்டி, 'மனித- வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு' என்ற தலைப்பிலும் நடக்கிறது.எல்.கே.ஜி., முதல் கல்லுாரி வரையிலான பிரிவுகளில், மாணவ மாணவியர் தங்களது, ஓவியம் மற்றும் கட்டுரை விபரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில், வரும் 28ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.வினாடி - வினா மற்றும் பேச்சுப்போட்டி, உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இன்று (24ம் தேதி) நடக்கிறது. இப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.பேச்சுப்போட்டி, காலை, 10:00 மணி முதல் மதியம், 12:15 மணி வரையும், வினாடி வினா போட்டி, மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரையும் நடைபெறும், என ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X