ஊட்டச்சத்து தோட்டம் விழிப்புணர்வு விழா| Dinamalar

ஊட்டச்சத்து தோட்டம் விழிப்புணர்வு விழா

Added : செப் 24, 2022 | |
உடுமலை:உடுமலை அருகே வேளாண் அறிவியல் நிலையத்தில் 'போஷன் மா' அபியான் மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.இந்திய உழவர் கூட்டுறவு, வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு சிறுநெல்லி, கொய்யா, மாதுளை, சீதாப்பழம் உள்ளிட்ட, 115 பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள், காய்கறி கீரை விதைகள்

உடுமலை:உடுமலை அருகே வேளாண் அறிவியல் நிலையத்தில் 'போஷன் மா' அபியான் மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.இந்திய உழவர் கூட்டுறவு, வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு சிறுநெல்லி, கொய்யா, மாதுளை, சீதாப்பழம் உள்ளிட்ட, 115 பழ மரக்கன்றுகள், மரக்கன்றுகள், காய்கறி கீரை விதைகள் வழங்கப்பட்டது.முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய ஊட்டச்சத்து தோட்டத்தில், பழ மரக்கன்று நடப்பட்டது. இதில், இயற்கை விவசாயம், ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல், இரும்புச்சத்து நிறைந்த கீரைகளை உட்கொள்ளுதல், கெட்ட உணவுகளை தவிர்த்தல், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X