பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கவிவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கவிவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 24, 2022 | |
உடுமலை:பருத்தி விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் கணிசமான பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. உயர் ரக பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டதால், விதை உரிமை விவசாயிகளின் கையை விட்டு போனது.ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையில் அரசு அடிக்கடி தலையிட்டதால், பல நேரங்களில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.தொடர் நஷ்டம்,

உடுமலை:பருத்தி விவசாயத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் கணிசமான பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. உயர் ரக பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டதால், விதை உரிமை விவசாயிகளின் கையை விட்டு போனது.ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையில் அரசு அடிக்கடி தலையிட்டதால், பல நேரங்களில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.தொடர் நஷ்டம், விலைவாசி உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், விவசாயிகள் மெல்ல மெல்ல பருத்தி விவசாயத்தை கைவிட்டு, வேறு பயிர்களுக்கு மாறத்துவங்கினர்.பருத்தி விளைச்சல் குறைந்ததன் விளைவாக, தற்போது ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் முடங்கியுள்ளது. ஜவுளித்துறைக்கு மூலப்பொருளான பருத்தி விவசாயத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை, பருத்தி விவசாயத்தின் பக்கம் திருப்பலாம். பருத்திக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து, விலை சரியும்போது அதை அரசே கொள்முதல் செய்யலாம்.பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் வாயிலாக, பருத்தி விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X