ஓய்வூதியத்திற்கு காத்திருக்கும்4,000 கிராமிய கலைஞர்கள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
மதுரை:தமிழக கலை பண்பாட்டுத் துறை மூலம் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த 4,000 நலிந்த கிராமிய கலைஞர்கள் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் 500 நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது.நலிந்த கலைஞர்கள் தாங்கள் நலிந்தவர்கள் தான் என கலை பண்பாட்டு துறை,

மதுரை:தமிழக கலை பண்பாட்டுத் துறை மூலம் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த 4,000 நலிந்த கிராமிய கலைஞர்கள் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
தமிழக கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் 500 நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது.
நலிந்த கலைஞர்கள் தாங்கள் நலிந்தவர்கள் தான் என கலை பண்பாட்டு துறை, கலைமாமணி விருது பெற்றவர்களிடம் அங்கீகார கடிதம் பெற வேண்டும்.அக்கடிதம், உரிய விண்ணப்பம், சான்றுகளுடன் கிராம நிர்வாக அதிகாரியிடம் வழங்க வேண்டும். அவர் அதை பரிசீலனை செய்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்குவர்.தாசில்தார் ஆய்வு செய்த பின்கலை பண்பாட்டுத் துறைக்கு விண்ணப்பம் வழங்கப்படும்.
அவர்கள் அதை அங்கீகரித்து இயல், இசை நாடக மன்றத்திற்கு அனுப்புவர்.அதற்கு பின் மாதம் தோறும் சம்பந்தப்பட்டவருக்கு 4,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் ஓய்வூதியம் வழங்கவில்லை.
அதனால் இந்தாண்டு 1,000 பேருக்கு வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை தெரிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள 4,000 கிராமிய கலைஞர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.வறுமையில் வாடும் தங்களுக்கு தமிழக அரசு கருணை காட்ட வேண்டும் என கலைஞர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X