'பணம் கொடுத்தால் தி.மு.க.,வில் பதவி'

Added : செப் 24, 2022 | |
Advertisement
தர்மபுரி:''கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தால், தி.மு.க.,வில் பதவிக்கு வரலாம்,'' என, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசினார்.தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம் ஆகிய நான்கு மாவட்ட வளர்ச்சிக்கு, தி.மு.க.,வினர் யாரும் பேசுவதில்லை.தி.மு.க.,வில் இன்று ஜனநாயகம் இல்லை.

தர்மபுரி:''கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தால், தி.மு.க.,வில் பதவிக்கு வரலாம்,'' என, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம் ஆகிய நான்கு மாவட்ட வளர்ச்சிக்கு, தி.மு.க.,வினர் யாரும் பேசுவதில்லை.தி.மு.க.,வில் இன்று ஜனநாயகம் இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தால், தி.மு.க.,வில் பதவிக்கு வரலாம்.
தி.மு.க.,வை வழிநடத்த தகுதியான ஆட்கள் இல்லாததால், அ.தி.மு.க.,வில் இருந்து ஆட்களை பிடித்து வந்து, தி.மு.க.,வை நடத்துகின்றனர்.தி.மு.க.,வில் கட்சிக்கு உழைத்தவன், சிறைக்கு சென்றவன் யாராவது ஒன்றிய செயலர், மாவட்ட செயலர் பதவிக்கு வர முடியுமா?
போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தினமும் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இவர், தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார். தி.மு.க.,வில் இருந்த போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X