நில ஆவணங்கள் 'அப்டேட்'விவசாயிகள் மத்தியில் சுணக்கம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:விவசாயிகள் நில ஆவணங்களை, 'அப்டேட்' செய்வதில் ஏற்படும் தாமதம் களைய, வங்கியினர், தங்கள் பிடியை இறுக்க வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் திட்டத்தில், போலி விவசாயிகளைகளையெடுக்கவும், தகுதியில்லாத விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களை நீக்கவும், நில ஆவணங்களை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தின் வாயிலாக, அப்டேட் செய்ய

உடுமலை:விவசாயிகள் நில ஆவணங்களை, 'அப்டேட்' செய்வதில் ஏற்படும் தாமதம் களைய, வங்கியினர், தங்கள் பிடியை இறுக்க வேண்டும்,' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் திட்டத்தில், போலி விவசாயிகளைகளையெடுக்கவும், தகுதியில்லாத விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களை நீக்கவும், நில ஆவணங்களை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தின் வாயிலாக, அப்டேட் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையிலும் கூட, 60 சதவீதம் விவசாயிகள், தங்கள் நில ஆவணங்களை, 'அப்டேட்' செய்யாததால், அவகாசம் வழங்கப்பட்டது.நில ஆவணங்களை 'அப்பேட்' செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில், கவுரவ ஊக்கத் தொகை கிடைக்கும் என அதிகாரிகள் கூறும் நிலையிலும், விவசாயிகள் மத்தியில் சுணக்கம் காணப்படுகிறது.நில ஆவணங்களை 'அப்டேட்' செய்யாத விவசாயிகளின், கவுரவ உதவித்தொகைக்கான கணக்கு முடக்கி வைக்கப்படும் என, வங்கியினர் அறிவித்தால், விவசாயிகள் துரிதமாக, தங்கள் நில ஆவணங்களை 'அப்டேட்' செய்து கொள்வர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X