வாய் பேச முடியாத பெண்ணைபலாத்காரம் செய்தவருக்கு ஆயுள்| Dinamalar

வாய் பேச முடியாத பெண்ணைபலாத்காரம் செய்தவருக்கு 'ஆயுள்'

Added : செப் 24, 2022 | |
பெரம்பலுார்:அரியலுார் அருகே, வாய் பேச முடியாத பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.அரியலுார் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்,43; கடந்த 2016ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 32 வயது பெண்ணை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.தொடர்ந்து, அந்தப் பெண்ணை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம்

பெரம்பலுார்:அரியலுார் அருகே, வாய் பேச முடியாத பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அரியலுார் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்,43; கடந்த 2016ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 32 வயது பெண்ணை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.தொடர்ந்து, அந்தப் பெண்ணை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால், பெண் கர்ப்பமடைந்தார்.


இது குறித்து, அப்பெண்ணின் உறவினர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகார்படி, போலீசார், செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்தன், வாய் பேச முடியாத பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபாரதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார். போலீசார், செந்திலை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X