கூடுதல் மின்சாரத்தை விற்கலாம்விவசாயிகளுக்கு வருவாய் ஈட்ட வழி

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:சூரிய ஆற்றல் வாயிலாக, உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டது.தற்போது சோலார் மின்உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.இது சம்பந்தமாக மாணவர்களிடம் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மின்

உடுமலை:சூரிய ஆற்றல் வாயிலாக, உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டது.தற்போது சோலார் மின்உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.இது சம்பந்தமாக மாணவர்களிடம் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, திருப்பூர் வட்டத்தின் சார்பில், மத்திய திறனாக்க செயலகத்துடன் இணைந்து, விவசாயிகளுக்கான மின்திறன் மேலாண்மை, மின் சிக்கன மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அவிநாசியில், வழங்கப்பட்டது.கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி, வரவேற்றார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை மண்டல கூடுதல் தலைமைப்பொறியாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.'ஏற்கனவே இலவச மின்சார விவசாய மின் இணைப்பு வைத்திருப்பவர்கள், கூடுதலாக, 11 கிலோ வாட் சோலார் ஆற்றல் வாயிலாக மின் உற்பத்தி செய்தால், விவசாயிகள் பயன்படுத்தியது போக, எஞ்சிய மின்சாரத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமே, ஒரு யூனிட், 2.28 ரூபாய்க்கு பெற்று கொள்ளும்.பதினோரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க, 5 லட்சம் ரூபாய் செலவாகும்; அதில், 30 சதவீதம் மாநில அரசு, 30 சதவீதம் மத்திய அரசு மானியமாக வழங்கும்; எஞ்சிய, 40 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக இருக்கும். வங்கிக்கடன் பெறவும் வசதி செய்யப்படும்,' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X