சிறுமிக்கு திருமணம்தீட்சிதர்கள் கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
கடலுார்:சிதம்பரத்தில், சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை உட்பட மூன்று தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் படித்துறை இறக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி, 24. இவருக்கு 14 வயது சிறுமியை, கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு

கடலுார்:சிதம்பரத்தில், சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை உட்பட மூன்று தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் படித்துறை இறக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி, 24. இவருக்கு 14 வயது சிறுமியை, கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கு புகார் சென்றது. சிறுமி மற்றும் அவரது தந்தையை நேற்று முன்தினம் டெல்டா பிரிவு போலீசார், கடலுார் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் தவமணி, கடலுார் மகளிர் போலீசில் புகார் செய்தார். சிறுமியின் தந்தை, திருமணம் செய்த பசுபதி தீட்சிதர், அவரது தந்தை ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X