நகரில் நிரந்தர தீர்வுக்கு தேவை நடவடிக்கை வாகன நெரிசல்!அலட்சிய அதிகாரிகளால் தவிக்கும் மக்கள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசு துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகருக்கு, சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம், திருப்பூர், கேரள மாநிலம் மூணாறு என முக்கிய நகரங்களை இணைக்கும் நகரமாக உள்ளதால், பிற
நகரில் நிரந்தர தீர்வுக்கு தேவை நடவடிக்கை வாகன நெரிசல்!அலட்சிய அதிகாரிகளால் தவிக்கும் மக்கள்

உடுமலை:உடுமலை நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசு துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகருக்கு, சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தாராபுரம், திருப்பூர், கேரள மாநிலம் மூணாறு என முக்கிய நகரங்களை இணைக்கும் நகரமாக உள்ளதால், பிற மாவட்ட, மாநில, சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களும் அதிகளவு பயன்படுத்தும் ரோடுகளாக உள்ளன.நகரின் பிரதான போக்குவரத்து ரோடுகளில், அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்பு மற்றும் வாகன நிறுத்தும் மையங்களாக மாற்றப்படுவதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளதோடு, அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.பிரதான போக்குவரத்து ரோடான, பழநி ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் முதல் காந்தி நகர் வரையிலும், பொள்ளாச்சி ரோட்டில் கொல்லன் பட்டறை வரையிலும், இரு புறமும், பார்க்கிங் வசதி, முன்பக்க திறவிடம் என எந்த விதமான கட்டட விதி முறைகளும் பின்பற்றப்படாமல் கட்டப்பட்ட வணிக வளாகங்கள், தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்புடன், கடைகளுக்கு வரும் வாகனங்களும், ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.


போக்குவரத்து நெரிசல்


இதனால், நகருக்குள் நுழையும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. அதே போல், ஏற்கெனவே குறுகலாக உள்ள தளி ரோட்டிலும், திட்டமிட்டபடி சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததோடு, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.அருகிலுள்ள, குட்டைத்திடலில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பொதுமக்கள் வர வேண்டும், என அறிவுறுத்தினாலும், போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாததால், தளி ரோட்டிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலில் முதன்மையான ரோடாக உள்ளது.அதே போல், இந்த ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டும், இணைப்பு சாலைகள் திட்டமிட்டபடி அமைக்கப்படாமல், தாறுமாறாக வாகனங்கள் சென்று, விபத்துக்ளை ஏற்படுத்தி வருகிறது.பாலத்தின் இரு புறமும் உடனடியாக வாகனங்கள் 'யு' டர்ன் அடிப்பதை தடுக்கும் வகையில், மையத்தடுப்பு பேரி கார்டுகள் மற்றும் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் முதல் நகர எல்லை வரை ஆக்கிரமிப்பு அகற்றி, ரோடு அகலப்படுத்தும் திட்டமும், போக்குவரத்து போலீசார், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடாததால், இப்பகுதியிலும், நெரிசல், விபத்துக்கள் ஏற்படுகிறது.அதே போல், தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு பகுதியிலும், நகராட்சி வசம் உள்ள கல்பனா ரோடு, லதாங்கி ரோடு, அனுஷம் ரோடு, சீனிவாசா வீதி என அனைத்து ரோடுகளிலும் இதே நிலை நீடிப்பதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.


பஸ் ஸ்டாண்டும் தப்பவில்லை


உடுமலை நகருக்குள் வரும் வாகனங்கள், பைபாஸ் ரோடு வழியாகவே வர வேண்டும். இங்குள்ள வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், பெரும்பகுதி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.மாலை நேரத்தில், 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், ரோட்டில் முழு பகுதியையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதனால், மொத்த ரோடும் வாகன ஆக்கிரமிப்புகளால் மாயமாகி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளது.பஸ் ஸ்டாண்டிற்கு, 5 நுழைவாயில்கள் உள்ள நிலையில், வாகனங்கள் நுழைவது, வெளியேறுவதில் உள்ள குழப்பம், அத்துமீறி பஸ் ஸ்டாண்டிற்கும் வரும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படும், 50க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் காரணமாக, இங்கு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.ஆக்கிரமிப்பு கடைகளில், முறைகேடாக, அதிகாரிகள் வாடகை வசூல் செய்து கொள்வதால், ஆக்கிரமிப்புகள், அத்துமீறும், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் குறித்து, அங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரும், நகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து, அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.புற நகர பகுதிகளில், முகாமிட்டு விதி மீறலுக்கு அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீசார், நகருக்குள் நிலவும் நெரிசலுக்கு தீர்வு மற்றும் அபராதம் விதிப்பு, வீல் லாக், வாகன பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X