'சித்தா பல்கலை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்!'

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:''சித்தா பல்கலை அமைப்பதற்கான சட்ட மசோதாவில் முரண்பாடு இல்லாததால், கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர், 'போண்டா' மணியை, அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். பின், அமைச்சர் அளித்த

சென்னை:''சித்தா பல்கலை அமைப்பதற்கான சட்ட மசோதாவில் முரண்பாடு இல்லாததால், கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர், 'போண்டா' மணியை, அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். பின், அமைச்சர் அளித்த பேட்டி:தமிழகத்தில் சித்தா மருத்துவ பல்கலை அமைப்பதற்கான சட்ட மசோதா, கவர்னருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளது.
மசோதாவில், மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகளுக்கும், தேசிய ஆணைய சட்டப்பிரிவுக்கும் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கிறதா என, ஆராய்ந்து பதில் அளிக்க, கவர்னரின் முதன்மை செயலர் அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.சட்ட வல்லுனர்களிடம் கருத்து பெறப்பட்டு, தமிழக சித்த மருத்துவ பல்கலை சட்ட மசோதா பிரிவுகளுக்கும், தேசிய ஆணைய சட்டம் மற்றும் ஓமியோபதி ஆணைய சட்ட பிரிவுகளுக்கும் முரண்பாடு இல்லை என, பதில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் அனுமதி அளித்த பின், மாதவரத்தில் பல்கலைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படும்.நடிகர் 'போண்டா' மணிக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகம், கல்லீரல், கணையம், தோல் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் தானமளிக்க பலர் முன்வருகின்றனர். அவற்றை வீணாக்காமல், அரசு பயன்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்தானம் அளித்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 'லயன்ஸ் கிளப்' சார்பில் வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் துவங்கி வைக்கப்பட்டு உள்ளன.தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், இந்திய அளவில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.
இந்தாண்டு தமிழகத்தில், 3 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. தற்போது வரை, 1.42 லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டில், 7,000 கண்கள் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை, 3,203 கண்கள் தானம் பெறப்பட்டுள்ளன. இதில், 1,526 கண்கள், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன.
'கண்ணொளி காப்போம்' திட்டத்தின் கீழ், 1.61 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. 2,278 முதியவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X