மதுரை அஹிம்சை சந்தையில் அனைத்தும் 'ஆர்கானிக்' மயம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
மதுரை:மதுரை காந்தி மியூசியத்தில் அஹிம்சை பொருளாதார கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் துவங்கிய அஹிம்சை சந்தை கண்காட்சியில், அணிகலன் முதல் ஆடை வரை அனைத்தும் 'ஆர்கானிக்' பொருட்களாக இடம்பெற்றுள்ளன.கண்காட்சியை சர்வோதயா தலைவி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் துவக்கி வைத்தார். 'தண்ணீர் மனிதர்' ராஜேந்தர் சிங், செஸி நிறுவனர் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் ஜில், காந்தி
மதுரை அஹிம்சை சந்தையில் அனைத்தும் 'ஆர்கானிக்' மயம்

மதுரை:மதுரை காந்தி மியூசியத்தில் அஹிம்சை பொருளாதார கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் துவங்கிய அஹிம்சை சந்தை கண்காட்சியில், அணிகலன் முதல் ஆடை வரை அனைத்தும் 'ஆர்கானிக்' பொருட்களாக இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியை சர்வோதயா தலைவி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் துவக்கி வைத்தார். 'தண்ணீர் மனிதர்' ராஜேந்தர் சிங், செஸி நிறுவனர் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் ஜில், காந்தி மியூசியம் இயக்குனர் அண்ணாமலை, சுற்றுச்சூழல் ஆர்வலர் புஷ்பநாத் கிருஷ்ணமூர்த்தி, ஷிபா அமைப்பு தலைவர் பஞ்சாட்சரம் பங்கேற்றனர்.
கண்காட்சியில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்டாலில் 1,999 ரூபாய்க்கு சந்தா கட்டினால் 555 ரூபாய் சேமிப்பில் ஓராண்டுக்கு, 'தினமலர்' நாளிதழ் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும்.ஸ்டாலில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் பெட்ஷீட் இலவசம். தாமரை பிரதர்ஸ் வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மூங்கில், பனை, நார், வாழைநார், சணலால் உருவாக்கப்பட்ட கைப்பை, பைல், பேன்சி ஹேண்ட் பேக், தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டையில் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள்.டெரகோட்டாவில் தயாரிக்கப்பட்ட அழகிய சிலைகள், கத்தும் குருவிகள், கைத்தறியில் செய்து இயற்கை சாயத்தில் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான சட்டை, துண்டு, சேலை, துாய பட்டுநுாலில் நுாற்று கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுச்சேலைகள், கருங்கன்னி பருத்தியில் செய்த சேலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி, குறுந்தானியங்களில் தயாரான லட்டு, அதிரசம், பணியாரம், இட்லி, தோசை, பிரியாணி, தயிர்சாதம் அதிக வரவேற்பை பெற்றன.வரும் 26 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. தினந்தோறும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடக்கிறது. அனுமதி இலவசம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X