துறைமுக வரைவு சட்ட மசோதா: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
சென்னை:இந்திய துறைமுகங்கள் மசோதா வரைவு சட்டத்தில், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் பிரிவுகளை அகற்ற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்திய துறைமுகங்கள் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதா 2022, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும்

சென்னை:இந்திய துறைமுகங்கள் மசோதா வரைவு சட்டத்தில், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் பிரிவுகளை அகற்ற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:இந்திய துறைமுகங்கள் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதா 2022, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் துறைமுகங்களை, மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர, கடல்சார் வாரியம் மற்றும் பங்குதாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.திருத்தப்பட்ட வரைவு மசோதா, மாநில அரசுகளால் சிறந்த முறையில், துறைமுகம் நிர்வகிக்கப்படுவதை புறக்கணிப்பதாக இருக்கும் என்று அஞ்சுகிறேன்.
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும், பெரிய துறைமுகங்களை விட, கடல்சார் மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் சிறிய துறைமுகங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.இதற்கு முக்கிய காரணம், தனியார் முதலீடுகள் வழியாக சிறிய துறைமுகங்கள் வளர்ச்சிக்கு, மாநிலங்கள் உதவுகின்றன.
குறிப்பாக குஜராத், தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள், சிறு துறைமுகங்களில் வசதிகளை மேம்படுத்தியதன் காரணமாக, கடல் சரக்கு கையாளுதல் அதிகரித்துள்ளது. இந்த வரைவு மசோதாவால் மாநிலங்களின் முன் முயற்சிகளை முடக்கும் நிலை உள்ளது. சிறு துறைமுகங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பாக, கடல்சார் வளர்ச்சி கவுன்சில் உள்ளது. இது, ஆலோசனை அமைப்பாக இருந்தது.
தற்போது ஒழுங்குமுறை ஆணையமாக மாற்றி, நிரந்தர ஊழியர்களை நியமிப்பது, மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதாகும். அதேபோல் மாநில கடல்சார் வாரியத்தின் அதிகாரங்களை பறிக்கவும், புதிய வரைவு சட்ட மசோதா வழி செய்வதை கடுமையாக எதிர்க்கிறோம்.
புதிய வரைவு சட்ட மசோதாவில், கடல்சார் வளர்ச்சி கவுன்சில் தொடர்புடைய, இரண்டு மற்றும் மூன்றாம் பிரிவுகளை முழுமையாக நீக்க வேண்டும். அதேபோல, மாநில கடல்சார் வாரியம் தொடர்பான, ஐந்தாம் பிரிவையும் முழுமையாக நீக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X