மத்திய அரசு வேடிக்கை பார்க்காது| Dinamalar

மத்திய அரசு வேடிக்கை பார்க்காது

Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை:'தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பா.ஜ., தொண்டர்களை கைது செய்வதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்பதை காவல் துறையும், தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., - எம்.பி., ராஜா கண்ணியமற்ற முறையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசியது குறித்து, மொத்த தமிழகமும் கொந்தளித்து

சென்னை:'தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பா.ஜ., தொண்டர்களை கைது செய்வதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்பதை காவல் துறையும், தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:தி.மு.க., - எம்.பி., ராஜா கண்ணியமற்ற முறையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசியது குறித்து, மொத்த தமிழகமும் கொந்தளித்து கொண்டிருக்கிறது.இந்த வேளையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வராக இருப்பவர், தொடர் மவுனம் சாதிப்பது, சந்தர்ப்பவாதமாக, பிரித்தாளும் சதியாக பார்க்கப்படுகிறது.


ராஜா பேசியது குறித்து தி.மு.க.,வின் நிலை என்ன? தி.மு.க.,வின் குரலாக வந்திருக்கும் ராஜாவின் பேச்சை முதல்வரின் மவுனம் ஆதரிக்கிறதா? மவுனமாக ரசிக்கிறதா?திராவிட மாடலை முன்னெடுக்க, தமிழர் அடையாளத்தை அழிக்க எடுக்கும் முயற்சி தானே ராஜாவின் பேச்சு. அவரது நோக்கம் தமிழரை பிளவுபடுத்திதிராவிடத்தை நிலைநிறுத்தி, மதமாற்றத்திற்கு பாதை அமைத்து தருவது தான் என்பது மறைக்க முடியாத உண்மை.


தமிழ் மக்கள் மனதை புண்படுத்தும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத ராஜா, தான் பேசியது சரிதான் என்று மீண்டும் பேசியிருக்கிறார். இதனால், ராஜாவின் பேச்சு முதல்வரின் ஆசியுடன் தான் பேசப்பட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.


தொடரும் ஸ்டாலினின் மவுனம் அதை நிரூபிக்கிறது.தமிழ் மக்களுக்காக, அவர்களின் தன்மானத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுக்கும் பா.ஜ., தொண்டர்களை கைது செய்வதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்பதை, தி.மு.க.,வின் ஏவல் துறையாக செயல்படும் காவல் துறையும், தலைக்கனத்துடன் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X