இயக்கப்படாத நிலக்கரி நீராவி இன்ஜின்கள் முடங்கி கிடக்கும் மத்திய அரசின் நடவடிக்கை

Added : செப் 24, 2022 | |
Advertisement
குன்னுார்:நீலகிரியில், நிலக்கரி நீராவி இன்ஜின்கள் இயக்கப்படாமல் உள்ளதால், மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை முடங்கி கிடக்கின்றன.நுாற்றாண்டு பழமை வாய்ந்த, நீலகிரி மலை ரயிலில் பயணிக்க, சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த, 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைத்து, 1918 முதல் நீலகிரியில் இயக்கி வந்த, '37384' எண் கொண்ட 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின்,
இயக்கப்படாத நிலக்கரி நீராவி இன்ஜின்கள்  முடங்கி கிடக்கும் மத்திய அரசின் நடவடிக்கை

குன்னுார்:நீலகிரியில், நிலக்கரி நீராவி இன்ஜின்கள் இயக்கப்படாமல் உள்ளதால், மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கை முடங்கி கிடக்கின்றன.நுாற்றாண்டு பழமை வாய்ந்த, நீலகிரி மலை ரயிலில் பயணிக்க, சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த, 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைத்து, 1918 முதல் நீலகிரியில் இயக்கி வந்த, '37384' எண் கொண்ட 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், திருச்சி பொன்மலையில் மீண்டும் பராமரிக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன், மேட்டுப்பாளையம் அனுப்பி வைத்த போதும், நீலகிரிக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதேபோல, நம் நாட்டில் முதல்முறையாக 'எக்ஸ் கிளாஸ் (எண் : 37400)' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாயில் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் தயாரித்து, கடந்த ஆண்டு, செப், 9 மற்றும் 19ம் தேதிகளில், மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்திய பின், சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படாமல், மேட்டுப்பாளையம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நீலகிரியின் சுற்றுலா மேம்பாட்டுக்கு, மத்திய அரசு கொண்டு வரும் இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் முடங்கி கிடக்கின்றன.நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் கூறுகையில்,'மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ள நீராவி இன்ஜின்களை, இரண்டாம் சீசனின் போது, மலை பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல் கூறுகையில்,''இதுகுறித்து, ரயில்வே உயரதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, விரைவில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X