பத்திரிகையாளர் நவிகா மீதான எப்.ஐ.ஆர்., டில்லி போலீசுக்கு மாற்ற உத்தரவு

Added : செப் 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசப்பட்டது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர் நவிகா குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் புதுடில்லி போலீசுக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சில மாதங்களுக்கு முன் 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக
 பத்திரிகையாளர், நவிகா ,எப்.ஐ.ஆர்.,டில்லி போலீஸ், உத்தரவு

புதுடில்லி :முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசப்பட்டது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர் நவிகா குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் புதுடில்லி போலீசுக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சில மாதங்களுக்கு முன் 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக பேசியதாக புகார் எழுந்தது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்
பட்டார்.இந்த விவகாரத்தில் நுாபுர் சர்மா பங்கேற்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நெறியாளர் நவிகா குமார் மீது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல்
அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.


latest tamil news



இதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நவிகா குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நவிகா குமாரை கைது செய்ய இடைக்கால
தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:நாட்டின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் நவிகாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் புதுடில்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும்.
எதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், அவற்றையும் புதுடில்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்ற வேண்டும்.
முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் நவிகா சார்பில் முறையீடு செய்ய, எட்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரையிலும் அவரை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போலீசாருக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
24-செப்-202212:36:30 IST Report Abuse
Suppan அதானே ஆண்டிமுத்து ராசா மனுஸ்ம்ரிதியில் உள்ளது என்று அடித்துவிடலாம். எந்த மனுஸ்ம்ருதி? அதாங்க அந்த வில்லியம் ஜோன்ஸ் அவிழ்த்துவிட்டது. யுனெசுகோ மன்றம் (?) ஈ.வெ. ராம் சாமிக்கு விருது அளித்தது என்று வீரமணி வகையறா அடித்துவிட்ட புருடாவை ஒரு வெள்ளையன் ஆங்கிலத்தில் எழுதினான். நம்ம சீடப்பிள்ளை அதையே ஆதாரமாகக் காட்டி யுனெஸ்கோ விருது என்று அடித்து விட்டார். ஆண்டிமுத்து ராசா அதே வில்லியம் ஜோன்ஸ் புத்தகத்தை ஆதாரமாக வெட்கமில்லாமல் அளிக்கிறார். ஆனால் நுபுர் ஷர்மா பேசியது....வேண்டாம் அப்புறம் கோபம் வரும்..
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-செப்-202210:50:40 IST Report Abuse
Anand ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசி திரியும் கேடுகெட்ட அரசியல் சாக்கடைகளையும், அந்நிய மதமாரி மூர்க்க ஜந்துக்களையும் எப்போது சட்டத்தின் முன் நிறுத்துவீர்கள் யுவர் ஹானர்? அல்லது இப்படி பேசினால் கேட்க நாதியில்லை என கூறி வரும் காலங்களில் இந்நாட்டில் ஹிந்துக்கள் அகதிகளாக வாழ அல்லது வாழவே முடியாதபடி செய்ய அனுமதிப்பீர்களா?
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
24-செப்-202205:06:03 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்த வழக்கில், இந்து தெய்வங்களை முதன் முதலாக அவதூறாக பேசியது என்பவர். அவரை கைது செய்யவில்லை. அவர் மீது நடவடிக்கை எதுவும் இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X