கூரியரில் வந்த குட்கா; 120 கிலோ பறிமுதல்| Dinamalar

கூரியரில் வந்த 'குட்கா'; 120 கிலோ பறிமுதல்

Added : செப் 24, 2022 | |
திருப்பூர்:பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கூரியரில் வந்த, 120கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புஷ்பா சந்திப்பு அருகே உள்ள கூரியர் அலுவலகத்துக்கு, பெங்களூரில் இருந்து குட்கா பார்சல் ஒன்று வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கொங்கு நகர் உதவி கமிஷனர் அனில்குமார்
கூரியரில் வந்த 'குட்கா'; 120 கிலோ பறிமுதல்

திருப்பூர்:பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கூரியரில் வந்த, 120கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புஷ்பா சந்திப்பு அருகே உள்ள கூரியர் அலுவலகத்துக்கு, பெங்களூரில் இருந்து குட்கா பார்சல் ஒன்று வந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கொங்கு நகர் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில், சம்பந்தப்பட்ட பார்சல் விபரத்தை கொண்டு பார்சலை கைப்பற்றினர். 120 கிலோ குட்கா பொட்டலம் இருப்பது தெரியவந்தது.போலீசார் வருவதை அறிந்து, சம்பந்தப்பட்ட நபர் பார்சலை பெற வரவில்லை. அங்கிருந்து யார் அனுப்பினர், இங்குள்ள நபர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X