கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில்7 சவரன், பணம் கொள்ளை| Dinamalar

கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில்7 சவரன், பணம் கொள்ளை

Added : செப் 24, 2022 | |
அவிநாசி:சேவூர், ஜே.பி நகரில் வசிப்பவர் ஜின்னா, 46; அவிநாசிலிங்கம்பாளையம் கூட்டுறவு சொசைட்டியில் கிளர்க். இவரது மனைவி அசரப் நிஷா, 40. பல்லடம், கரைப்புதுார் பகுதியில் வி.ஏ.ஓ., உதவியாளர்.நேற்று முன்தினம் மகன் அராபத்தை, பள்ளிக்கு அனுப்பி விட்டு இருவரும், அவரவர் வேலைகளுக்கு சென்று விட்டனர். அராபத் மாலையில்பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவுகள்

அவிநாசி:சேவூர், ஜே.பி நகரில் வசிப்பவர் ஜின்னா, 46; அவிநாசிலிங்கம்பாளையம் கூட்டுறவு சொசைட்டியில் கிளர்க். இவரது மனைவி அசரப் நிஷா, 40. பல்லடம், கரைப்புதுார் பகுதியில் வி.ஏ.ஓ., உதவியாளர்.நேற்று முன்தினம் மகன் அராபத்தை, பள்ளிக்கு அனுப்பி விட்டு இருவரும், அவரவர் வேலைகளுக்கு சென்று விட்டனர். அராபத் மாலையில்பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து தனது தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.விரைந்து சென்றங சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஏழு சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வவிசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X