6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆரணி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆரணி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Added : செப் 24, 2022 | |
திருவண்ணாமலை:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தாம்பாடியை சேர்ந்தவர் மகேந்திரன், 27; இவர் கடந்த 2018ல் டியூசன் நடத்துவதாக கூறி, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்துஉள்ளார்.சிறுமியின் பெற்றோர் அளித்த

திருவண்ணாமலை:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கஸ்தாம்பாடியை சேர்ந்தவர் மகேந்திரன், 27; இவர் கடந்த 2018ல் டியூசன் நடத்துவதாக கூறி, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்துஉள்ளார்.


சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மகேந்திரனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X