ஜெர்மனியில் தொழில் துவங்கலாமே! தொழில்முனைவோருக்கு அழைப்பு| Dinamalar

ஜெர்மனியில் தொழில் துவங்கலாமே! தொழில்முனைவோருக்கு அழைப்பு

Added : செப் 24, 2022 | |
கோவை:ஜெர்மன் - இந்தியா கூட்டு தொழில் வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில், கோவை தொழில் முனைவோருக்கு ஜெர்மனி அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜெர்மன் - இந்தியா கூட்டு தொழில் வாய்ப்புகள் குறித்து, 'ஜெர்மன் - இந்தியா ரவுண்ட் டேபிள்' என்ற பெயரில், கோவையில் கருத்தரங்கு நடந்தது. ஜெர்மனி, துரிங்கியா நகரின் அறிவியல் மற்றும் டிஜிட்டல் சொசைட்டி, பொருளாதார அமைச்சர் உல்வ்கேங்
ஜெர்மனியில் தொழில் துவங்கலாமே! தொழில்முனைவோருக்கு அழைப்பு

கோவை:ஜெர்மன் - இந்தியா கூட்டு தொழில் வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில், கோவை தொழில் முனைவோருக்கு ஜெர்மனி அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜெர்மன் - இந்தியா கூட்டு தொழில் வாய்ப்புகள் குறித்து, 'ஜெர்மன் - இந்தியா ரவுண்ட் டேபிள்' என்ற பெயரில், கோவையில் கருத்தரங்கு நடந்தது.

ஜெர்மனி, துரிங்கியா நகரின் அறிவியல் மற்றும் டிஜிட்டல் சொசைட்டி, பொருளாதார அமைச்சர் உல்வ்கேங் டிவென்சே மற்றும் சென்னை, ஜெர்மனி கான்சல் ஜெனரல் மிக்கேலா குச்லர் ஆகியோர் தலைமையில், ஜெர்மனி தொழில் வர்த்தகர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைத்து வந்திருந்தனர்.துரிங்கியா நகரின் அறிவியல் மற்றும் டிஜிட்டல் சொசைட்டி, பொருளாதார அமைச்சர் உல்வ்கேங் டிவென்சே பேசுகையில், ''இந்திய தொழில்முனைவோர்களை ஜெர்மனிக்கு அழைத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். இரு நாட்டு தொழில்முனைவோர்களிடம் இருந்து, சிறந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கோவையை போலவே துரிங்கியாவில் நிறைய சிறு தொழில் முனைவோர் உள்ளன. இந்தியாவில், திறமையான தொழில் முனைவோர், பல்கலை, மக்கள், மாணவர்கள் உள்ளனர். அதுவே, இந்தியாவுடன் தொழில் மேற்கொள்வதற்கான முக்கிய காரணம். இந்தியாவுடனான உறவு நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன்,'' என்றார்.


ஜெர்மன் - இந்தியன் ரவுண்ட் டேபிள் அமைப்பு நிறுவனர் ராமசாமி, கோவை தலைவர் சந்திரசேகர் மற்றும் ஜெர்மன்- இந்தியன் ரவுண்ட் டேபிள், துரிங்கியா இன்டர்நேஷனல், தெற்கு ஆசியா அமைப்பு தலைவர் பிரான்சிஸ்கா கின்டர்வாட்டர், ஜி.டி., குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார், பெர்லினில் உள்ள துரிங்கியா நகரின் தலைவர் ரெய்மண்ட் கிரவோ மற்றும் சென்னை, ஜெர்மனி கான்சல் ஜெனரல் மிக்கேலா குச்லர் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X