பசுமையை காக்க வலிமை; 1,400 தேக்கு மரக்கன்று நடவு

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று ஒரேநாளில், 2,230 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மரம் நட, மக்கள் மத்தியில் நாளுக்குநாள் ஆர்வம் பெருகுகிறது.இதனால், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 8, இலக்கை நோக்கி வேகமாக
பசுமையை காக்க வலிமை; 1,400 தேக்கு மரக்கன்று நடவு

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நேற்று ஒரேநாளில், 2,230 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மரம் நட, மக்கள் மத்தியில் நாளுக்குநாள் ஆர்வம் பெருகுகிறது.இதனால், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 8, இலக்கை நோக்கி வேகமாக சீறிப்பாய்கிறது. அவ்வகையில், இந்த திட்டத்தில் நேற்று, இரண்டு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.வெள்ளகோவில் அருகே தென்னிலையில், முருகேசன் மாலதி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில், 821 வேம்பு; 9 கொடுக்காப்புளி என, மொத்தம் 830 மரக்கன்றுகள் நடப்பட்டன.வெள்ளகோவில் மாந்தபுரத்தில், மோகன்ராஜ் -சாந்தி ஆகியோருக்கு சொந்தமான கார்வனத்தில், 1,400 தேக்கு மரக்கன்று நடப்பட்டன. இரண்டு இடங்களில் நடந்த நிகழ்வில், நேற்று ஒரேநாளில் மொத்தம் 2,230 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X