மாணவருக்கு, 36 வகை மருத்துவ பரிசோதனை அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்| Dinamalar

மாணவருக்கு, 36 வகை மருத்துவ பரிசோதனை அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

Added : செப் 24, 2022 | |
பல்லடம்:மாணவர்களிடையே, 36 வகை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களை புலம்ப செய்துள்ளது.தேர்தல் பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்கின்றனர். சமீப காலமாக, மாணவர்களின் வருகை பதிவு, உணவு, உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து, தினமும், 'எமிஸ்'

பல்லடம்:மாணவர்களிடையே, 36 வகை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களை புலம்ப செய்துள்ளது.தேர்தல் பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்கின்றனர். சமீப காலமாக, மாணவர்களின் வருகை பதிவு, உணவு, உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து, தினமும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள், எந்த நேரமும், கம்ப்யூட்டர், மொபைல் போன் சகிதமாகவே காணப்படுகின்றனர். தற்போது, மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் புதிய பணியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:கல்வித்துறை தரும் அனைத்து பணிகளையும் நாங்கள் விடுமுறை நாளிலும் செய்து வருகிறோம். தற்போது, வைட்டமின் குறைபாடு, ரத்த சோகை, கண்பார்வை கோளாறு, காசநோய், தைராய்டு உள்ளிட்ட, 36 வகை நோய்கள் குறித்த பரிசோதனைகளை மாணவர்களிடம் தனித்தனியே மேற்கொண்டு, பட்டியலை அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மருத்துவர்கள் செய்ய வேண்டிய பணியை, ஆசிரியர்கள் மேற்கொள்வது எவ்வாறு சரியாக இருக்கும். இதனால், மாணவர்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, மாணவியருக்கு நாப்கின், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.அரசு திட்டங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், இதுபோன்ற பணிகளை வழங்குவதால், மாணவர்களின் கல்வி உட்பட, எதிர்காலமும் பாதிக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை இந்த புதிய உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் புலம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X