'சைமா' சங்க நிர்வாகிகள் தேர்தல் களம் காணும் 53 பேர்; ஓட்டு வேட்டை தீவிரம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:'சைமா' சங்க தேர்தலில், இரண்டு வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வைகிங் ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் தலைவராகிறார். துணை தலைவர், செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு 53 பேர் தேர்தல் களம் காண்கின்றனர்.திருப்பூர் பின்னலாடை துறையினர் தாய் சங்கமானதென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (சைமா), 2022 ---- 25க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல்,

திருப்பூர்:'சைமா' சங்க தேர்தலில், இரண்டு வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வைகிங் ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் தலைவராகிறார். துணை தலைவர், செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு 53 பேர் தேர்தல் களம் காண்கின்றனர்.திருப்பூர் பின்னலாடை துறையினர் தாய் சங்கமானதென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துக்கு (சைமா), 2022 ---- 25க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 29ம் தேதி நடக்கிறது. வைகிங் ஈஸ்வரனை தலைவராக நிறுத்தி ஒரு அணி,- பிரியா ஒசைரிஸ் பாலசந்தரை துணை தலைவராக நிறுத்தி மாற்றத்துக்கான அணி, என தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிடுகின்றனர்.மொத்தம் 56 மனு தாக்கல் செய்யப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் வக்கீல் ராமமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், மனுக்களை பரிசீலனை செய்தனர். இதில், கூடுதலாக தாக்கல் செய்திருந்த 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; 54 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.வைகிங்' ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்க தலைவராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரு துணை தலைவர் பதவிக்கு இருவர், ஒரு பொதுச்செயலாளர் பதவிக்கு இருவர், இணை செயலாளர் பதவிக்கு மூவர், ஒரு பொருளாளர் பதவிக்கு இருவர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, 44 என, மொத்தம் 53 பேர் தேர்தல் களம் காண தயாராக உள்ளனர்.வேட்பு மனு வாபஸ் பெற, வரும் 25ம் தேதி மாலை, 6:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்று, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.கூடுதல் வேட்பாளர் போட்டியிடும் பதவிகளுக்கு, 29ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால், வேட்பாளர்கள், உறுப்பினர்களை நேரில் சந்தித்தும், சமூக வலைத்தளம் வாயிலாகவும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X