உயர்கல்வியில் சேராத மாணவர்கள் மீண்டும் படிப்பு தொடர நடவடிக்கை

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களில் இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு முடித்தவர்கள் எவரேனும் உயர்கல்வி தொடராமல் உள்ளனரா என்பது குறித்த தகவல்களை தயார் செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட

திருப்பூர்:பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களில் இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு முடித்தவர்கள் எவரேனும் உயர்கல்வி தொடராமல் உள்ளனரா என்பது குறித்த தகவல்களை தயார் செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கடந்த கல்வியாண்டில் (2021- 22) பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்கள், இந்தாண்டு, (2022 - 23) உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், உயர்கல்வி தொடராத மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கவும் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தின் போது சேகரிக்கப்பட்ட, 79,762 மாணவர்களின் விவரங்களில், 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்க வில்லை என்பது தெரிந்தது. இம்மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநில திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மாணவர்களின் எமிஸ் எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைபேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பணிகளை முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்றும், இது குறித்த விவரங்களை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 79,762 மாணவர்களின் விவரங்களில், 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது தெரிந்தது. ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X