1,341 மையத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் பூஸ்டர் செலுத்தி கொள்ள வாய்ப்பு; கலெக்டர் அழைப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நாளை (25ம் தேதி), 38ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. பூஸ்டர் இலவசமாக செலுத்த உள்ள கடைசி முகாம் இது, என்பதால், கூட்டம் சற்று அதிகரிக்குமா என சுகாதாரத்துறை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இது குறித்து, கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், 12 முதல், 14 வயது வரை, 15 முதல், 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும், 18 வயதுக்கு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நாளை (25ம் தேதி), 38ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. பூஸ்டர் இலவசமாக செலுத்த உள்ள கடைசி முகாம் இது, என்பதால், கூட்டம் சற்று அதிகரிக்குமா என சுகாதாரத்துறை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இது குறித்து, கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், 12 முதல், 14 வயது வரை, 15 முதல், 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், 38ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், வரும் 25ம் தேதி நடக்கிறது.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் அல்லது, 26 வாரம் கடந்த, 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இம்முகாமில் செலுத்தப்படும். 25 மற்றும் 30ம் தேதி வரை மட்டும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும்.மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைத்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவ கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மாவட்டத்தின், 1,341 இடங்களில் முகாம் நடக்கிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.அனைத்து பகுதியிலும் முகாம்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.வரும், 25 மற்றும் 30ம் தேதி வரை மட்டும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X