கலெக்டர் ஆபீசில் கட்டண வசூல்விசைத்தறி உரிமையாளர் புகார்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பல்லடம்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கட்டண வசூல் குறித்து, விசைத்தறி உரிமையாளர் ஒருவர் புகார் அளித்தார்.பல்லடம், இச்சிப்பட்டி ஊராட்சி, தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 48. விசைத்தறி உரிமையாளர். இவர், நில ஆவணங்கள் தொடர்பான எஸ்.ஆர்., நகல் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கு நடந்த

பல்லடம்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கட்டண வசூல் குறித்து, விசைத்தறி உரிமையாளர் ஒருவர் புகார் அளித்தார்.பல்லடம், இச்சிப்பட்டி ஊராட்சி, தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 48. விசைத்தறி உரிமையாளர். இவர், நில ஆவணங்கள் தொடர்பான எஸ்.ஆர்., நகல் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கு நடந்த கட்டணம் வசூல் குறித்து, முத்துக்குமாரசாமி கலெக்டரிடம் புகார் அளித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கடந்த, 13ம் தேதி எஸ்.ஆர்., நகல் கேட்டு விண்ணப்பித்தேன். இதற்காக, 515 ரூபாய் ஆன்லைனில் செலுத்தினேன். கலெக்டர் அலுவலகத்தில், நகல் பெற்று கொள்ளுமாறு தெரிவித்தனர். அங்கு சென்றபோது, ஒரிஜினல் ஆவணங்களை என்னிடம் கொடுத்து, வெளியே சென்று ஜெராக்ஸ் எடுத்து, 50 கோர்ட் ஸ்டாம்ப் வாங்கி வருமாறும் கூறினர்.இதற்காக, மொத்தம், 464 ரூபாய் செலவானது. ஜெராக்ஸ் மற்றும் கோர்ட் ஸ்டாம்புக்காக, ஏற்கனவே, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திய நிலையிலும், வெளியே ஜெராக்ஸ் மற்றும் ஸ்டாம்புக்காக மீண்டும் செலவானது. இது குறித்து, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X