கால்நடை மருத்துவமனை நேரம் மாற்ற வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் வேண்டுகோள்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்:விவசாயிகள் வசதிக்காக, கால்நடை மருத்துவமனைகள், காலை,8:00 முதல் பகல் 2:00 மணி வரை இயங்க வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கோட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் வரவேற்றார். தாசில்தார் உட்பட, அலுவலர்கள் பங்கேற்றனர்.மங்கலம் கிராம நீரினை
கால்நடை மருத்துவமனை நேரம் மாற்ற வேண்டும்! குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர்:விவசாயிகள் வசதிக்காக, கால்நடை மருத்துவமனைகள், காலை,8:00 முதல் பகல் 2:00 மணி வரை இயங்க வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கோட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., பண்டரிநாதன் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் வரவேற்றார். தாசில்தார் உட்பட, அலுவலர்கள் பங்கேற்றனர்.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி:கால்நடைகளை அழைத்துச்சென்று சிகிச்சை பெற வசதியாக, காலை, 8:00 முதல், பிற்பகல், 2:00 மணிவரை மருத்துவமனைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரபாண்டி உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும்.மங்கலம் - சின்னாண்டி பாளையம் -ராஜகணபதி நகர் வரையிலான மண்பாதையை, தார்ரோடாக மாற்ற வேண்டும்.கொ.ம.தே.க., விவசாய அணி செயலாளர் தேவராஜ்:திருப்பூர் - நம்பியூர் செல்லும், 26 ஏ, 26 பி உள்ளிட்ட பஸ்கள் இயங்குகின்றன; தற்போது, சில பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ்களை இயக்க வேண்டும். குன்னத்துார் - சேவூர் ரோட்டை சீரமைக்க வேண்டும். மின் இணைப்பு பெற, சரியான ஆவணங்கள் இருந்தும், உரிமைச்சான்று தேவையென கேட்கின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்துக்குளி செயலாளர் குழந்தைசாமி:விருமாண்டம்பாளையம் ஊராட்சியின் சில பகுதிகளில் காட்டுப்பன்றிகள் புகுந்து தொல்லை செய்கின்றன. விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதால், காட்டுப்பன்றி மற்றும் மான்களை அப்புறப்படுத்த வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அப்புசாமி:பரமசிவம்பாளையம் குட்டையில், வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது; குட்டையில் காய்ந்த நிலையில் உள்ள கருவேல மரங்களால், வண்டல் மண் எடுக்க இயலவில்லை. மரங்களை ஏலத்தில் விட்டு, குளத்தை ஆழமாக துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X