தீபாவளிக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்! சி.ஐ.டி.யு., பனியன் சங்கம் வலியுறுத்தல்| Dinamalar

தீபாவளிக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்! சி.ஐ.டி.யு., பனியன் சங்கம் வலியுறுத்தல்

Added : செப் 24, 2022 | |
திருப்பூர்:'பனியன் தொழிலாளருக்கு, கடந்தாண்டைவிட இந்தாண்டு கூடுதல் போனஸ் வழங்கவேண்டும்,' என, சி.ஐ.டி.யு., வலியுறுத்தி உள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போனஸ் வழங்கப்படுவதால், பனியன் தொழிலாளர் கொண்டாட்டத்தில் தீபாவளி முக்கியத்துவம் பெறுகிறது.அடுத்த மாதம், 24ம் தேதி

திருப்பூர்:'பனியன் தொழிலாளருக்கு, கடந்தாண்டைவிட இந்தாண்டு கூடுதல் போனஸ் வழங்கவேண்டும்,' என, சி.ஐ.டி.யு., வலியுறுத்தி உள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போனஸ் வழங்கப்படுவதால், பனியன் தொழிலாளர் கொண்டாட்டத்தில் தீபாவளி முக்கியத்துவம் பெறுகிறது.அடுத்த மாதம், 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 30 நாட்களே உள்ளநிலையில், பனியன் தொழிற்சங்கங்கள் போனஸ் கோரிக்கையை முன்வைக்க துவங்கிவிட்டன.திருப்பூர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் பனியன் தொழிலாளர் சங்க நிர்வாக குழு கூட்டம், சங்க தலைவர் மூர்த்திதலைமை யில் நேற்று நடந்தது.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பனியன் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்கவேண்டும்.பண்டிகைக்கு 15 நாட்களுக்குமுன் போனஸ் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அவர்களின் பணியை கணக்கிட்டு, போனஸ் வழங்க வேண்டும்.போனஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் முதல் வாரத்தில், திருப்பூரில் தெருமுனை கூட்டம் நடத்த வேண்டும்.


சம்பள உயர்வு


பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தப்படி, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில்5 சதவீத உயர்வு; பஞ்சப்படி 185 ரூபாய்; பயணப்படி 25 ரூபாய் சேர்த்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத் உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X