நந்தியம் பெருமான் மீது படர்ந்த சூரிய ஒளி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பரவசம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மகாளய அமாவாசை பிரதோஷ வழிபாடு நடந்தது.மூலவர், அதிகார நந்தி, ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கு, 16 வகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வில்வம், செண்பக மாலை அலங்காரத்துடன், திருவாசக பாடல் பாராயணத்துடன் வழிபாடு நடந்தது. நந்தியம்பெருமான் தீபாராதனை நிறைவடைந்து, மூலவருக்கு தீபாராதனை மற்றும் பஞ்ச தீப வழிபாடு நடந்து
நந்தியம் பெருமான் மீது படர்ந்த சூரிய ஒளி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பரவசம்

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மகாளய அமாவாசை பிரதோஷ வழிபாடு நடந்தது.மூலவர், அதிகார நந்தி, ஸ்ரீஉமாமகேஸ்வரருக்கு, 16 வகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, வில்வம், செண்பக மாலை அலங்காரத்துடன், திருவாசக பாடல் பாராயணத்துடன் வழிபாடு நடந்தது. நந்தியம்பெருமான் தீபாராதனை நிறைவடைந்து, மூலவருக்கு தீபாராதனை மற்றும் பஞ்ச தீப வழிபாடு நடந்து கொண்டிருந்தது. சூரிய வெளிச்சம் குறைந்து, பக்தர்கள், மூலவரை தரிசனம் செய்து கொண்டிருந்த போது, சாளரத்தில் இருந்து பாய்ந்த சூரியகதிர்கள், நந்தியம்பெருமானின் முகத்தில் பட்டு ஜொலித்தது.அதாவது, சூரிய வெளிச்சம் குறைந்திருந்த நிலையில், திடீரென நந்தியம் பெருமானின் முகம் மட்டும் சூரிய வெளிச்சத்தில் ஜொலித்தது. மகா மண்டப சாளரத்தில் உள்ள கம்பிகளில் பட்டு, கதிர்களாக மாறி, ஒரு சில நொடிகள் மட்டும் படர்ந்திருந்தது. இதைக்கண்ட பக்தர்கள், 'சிவாயநம... சிவாயநம' என்று பரவ சத்துடன் வழிபட்டனர். தொடர்ந்துஸ்ரீஉமாமகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில், கோவில் வெளிப்பிரகாரத்தில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X