நல்லா வேலை பார்த்தது பிடிக்கலையாங்க? ஊராட்சி செயலரை மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு| Dinamalar

நல்லா வேலை பார்த்தது பிடிக்கலையாங்க? ஊராட்சி செயலரை மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு

Added : செப் 24, 2022 | |
கோவை:ஊராட்சி செயலரை மாற்றியதற்கு, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் சமீரனிடம் மனு கொடுத்தனர்.கோவை மாவட்டத்தில், ஒரே நாளில், 84 ஊராட்சி செயலர்கள் சமீபத்தில் வேறிடத்துக்கு மாற்றப்பட்டனர். அதில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி செயலராக இருந்த செழியன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சிக்கு
நல்லா வேலை பார்த்தது பிடிக்கலையாங்க? ஊராட்சி செயலரை மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு

கோவை:ஊராட்சி செயலரை மாற்றியதற்கு, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் சமீரனிடம் மனு கொடுத்தனர்.கோவை மாவட்டத்தில், ஒரே நாளில், 84 ஊராட்சி செயலர்கள் சமீபத்தில் வேறிடத்துக்கு மாற்றப்பட்டனர். அதில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி செயலராக இருந்த செழியன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சிக்கு மாற்றப்பட்டார்.அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை மூன்றாண்டுக்கு ஒருமுறையே இட மாறுதல் செய்வர்; புகார்கள் வந்தால், நிர்வாக நலன் கருதி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவர் அல்லது வேறிடங்களுக்கு நியமிக்கப்படுவர். அதிலும், ஊராட்சிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவோரையே மாற்றச் சொல்லி, தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.ஊராட்சி செயலர் செழியன், பேரூர் செட்டிபாளையத்தில் ஓராண்டு, ஏழு மாதங்களே பணியாற்றியுள்ளார். இவர் மீது ஊராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் கூறவில்லை. இவரை திடீரென இட மாற்றம் செய்ததோடு, இதற்கு முன் பணியாற்றி, பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளான செயலர் செந்தில்குமார், மத்வராயபுரத்துக்கு மாற்றப்பட்டார். அவரையே மீண்டும் நியமித்திருப்பதால், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதனால், ஊராட்சி தலைவர் சாந்தி தலைமையில் துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த கடிதத்தில், 'ஊராட்சி செயலராக பணிபுரிந்த செழியன், 12 இடங்களில் அடர் வனம் உருவாக்கியுள்ளார். மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவை அரைத்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தினார். பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்கு செயலராக செழியனையே மீண்டும் நியமிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X