இளைஞர் திறன் திருவிழாவில்20 தொழில் துறைகளில் பயிற்சி

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:கோவில்பாளையத்தில், வரும், 28ல் நடக்கும் இளைஞர் திறன் திருவிழாவில், 20 தொழில் துறைகளில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் இளைஞர் திறன் திருவிழா நடத்துகிறது. இதையொட்டி நடக்கும் இலவச திறன் பயிற்சியில், 18 முதல், 45 வயது வரையுள்ள, ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கலாம். தங்களுக்கு

கோவை:கோவில்பாளையத்தில், வரும், 28ல் நடக்கும் இளைஞர் திறன் திருவிழாவில், 20 தொழில் துறைகளில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் இளைஞர் திறன் திருவிழா நடத்துகிறது. இதையொட்டி நடக்கும் இலவச திறன் பயிற்சியில், 18 முதல், 45 வயது வரையுள்ள, ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கலாம். தங்களுக்கு ஏற்ற பயிற்சியை தேர்வு செய்யலாம். கோவில்பாளையம் இன்போ தொழில்நுட்பக் கல்லுாரியில், 28ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.வேர்ஹவுஸ் சூப்பர்வைசர், ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட், ஆன்ட்ராய்டு மொபைல் போன் ஆபரேட்டர், உதவி கேட்டரிங் மேலாளர், ஜெனரல் டூட்டி அசிஸ்டென்ட், ஷூவிங் மெஷின் ஆபரேட்டர் நிட்ஸ், பிசினெஸ் கரஸ்பாண்டென்ட் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இது மட்டுமின்றி, பியூட்டி பார்லர் மேனேஜ்மென்ட், பெண்களுக்கான டெய்லர், மெழுகுவர்த்தி தயாரிப்பு, ஊறுகாய், மசாலா பவுடர் தயாரிப்பு, காஸ்ட்யூம் ஜூவல்லரி, தேனீ வளர்ப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐ.டி.இ.எஸ்., ஆட்டோமோட்டிவ், ஜவுளி, கைத்தறி, சுகாதாரத்துறை என, 20 துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, சுய விவரம், போட்டோ மற்றும் இதர தகுதிச் சான்றுகளுடன் பங்கேற்கலாம் என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X