மருத்துவ காப்பீடு திட்டத்தில் 32,577 பேருக்கு இலவச சிகிச்சை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கோவை:முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 32 ஆயிரத்து, 577 பேர் பயன் பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில், 15 அரசு மருத்துவமனைகள், 99 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் ஓராண்டில் கோவை மாவட்டத்தைச்

கோவை:முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், கோவை மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 32 ஆயிரத்து, 577 பேர் பயன் பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில், 15 அரசு மருத்துவமனைகள், 99 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் ஓராண்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, 32 ஆயிரத்து, 577 பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென மருத்துவமனைகளுக்கு, 77.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 6 லட்சத்து, 12 ஆயிரத்து, 890 குடும்பத்தினருக்கு, காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்ற, 9 பயனாளிகளுக்கு, கலெக்டர் சமீரன் பரிசு வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த, 3 காப்பீடு திட்ட தொடர்பு அலுவலர்களுக்கு சான்றிதழ், 5 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கினார்.டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், சுகாதார இணை இயக்குனர் சந்திரா, மாவட்ட காப்பீடு திட்ட அலுவலர் பாண்டியராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயன் பெறுவது எப்படி?

ஆண்டு வருமானம், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் குடும்பத்தினர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். காப்பீடு அட்டை தேவைப்படுவோர், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமான சான்று ஆகிய ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மையத்தில் பதிவு செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X